Monday, December 03, 2012

சென்றுவா சிற்றழகே

மின்விசிறியில் தொங்கினால்
கண்ணீர் காயுமா தோழி?

நாலாறாண்டுகள்
வாழ்கைச் சக்கரம்
சுற்றிய களைப்பு -
இளைபாறுதல்  தேடிவிட்டாய்!

சென்றுவா தோழி.
சென்றுவா.

உந்தன் சுமைகளின்
சுகங்கள் பகிர
உகந்தவன் நான் இல்லை
கொக்கரித்து சென்றுவிட்டாய்.

சென்றுவா தோழி.
சென்றுவா.

நீ தேடும் நிம்மதி
அங்குதான் கிடைக்குமென்றால்!
என்னிற் சிறந்தவர்கள்
அங்குதான் உண்டென்றால்!!

சென்றுவா தோழி.
சென்றுவா.

காலச்சக்கரத்தில் சுழன்று
தலைதனில் வெள்ளிக்கீற்றுகள்
கொண்டு - தள்ளாடி நடந்து
 கல்லூரிப்பருவம் பற்றி
சிகிலாய்த்து பேசமுடியாது!

சென்றுவா தோழி.

சென்றுவா.

இறைவா!! இந்தப்பேதையின்
பாவம் மன்னி.
இளைபாறுதல் தேடி
உன்னிடம் வந்த
என்னுயிர்த் தோழியை
மன்னி....

In loving memory of Sripriya - Dec 1977 to Dec 2003. 

8 comments:

siva said...

Touching da..

Unknown said...

Get the dates
right ...
its 1977 to 2003 . you met me in sep 2004 and told me about her at our first meeting .

the g said...

Thanks Siva.

the g said...

+Rema Nathan - Wife is always right. - Corrected the post.

manoj said...

Machi .. went back to our college days daa..

Thirumalai said...

பிரிவின் வலி
தமிழில் தெரிகிறது ...

the g said...

Thank you +Thirumalai

maithriim said...

//மின்விசிறியில் தொங்கினால்
கண்ணீர் காயுமா தோழி?//
Sums up the whole story poignantly!Feel for you and your friend.

amas32