எத்தனை எத்தனை ஆண்டுகள் தான்
சுய சிந்தனை இன்றியே ஓட்டளிப்பாய்?
பித்தளை ஈயப் பாத்திரத்தை - நீ
தங்கமாய் வெள்ளியாய் பார்த்து ஏம்மாந்திடுவாய்?
மறு கன்னம் மீண்டும் காட்டி
இரு கன்னத்தில் பதிந்தது கைச்சின்னம்.
கொள்ளேன் என்பது உயர்ந்தன்று - கற்றதை
பள்ளியில் ஏனோ மறந்து வந்தாய்?
எழு ஞாயிறு தந்த எச்சதையும்
இரு இலைகள் தந்த மிச்சத்தையும்
ஜன நாயகம் என்ற போர்வையிலே
மானம் தொலைத்துப் போர்த்திக்கொண்டாய்!
பாரதத்தை பாஞ்சாலியாய் பார்த்தான் பாரதி!
ஏ நடுத்தர வர்க்கமே! இன்று
பாரதத்தில் பாஞ்சாலி நீ - விழித்துவிடு.
உண்மை தெளிந்துவிடு, கண்ணனும் நீ!!
அறுபது ஆண்டுகள் கடந்து வந்தாய்
காந்தியின் குரங்காய் கிடந்தது வந்தாய்!
சந்திர போசினை மறந்துவிட்டாய் - பகத்
சிங்கினை கூட தொலைத்து விட்டாய்!!
குனிந்தது போதும் நிமிர்ந்துவிடு - உந்தன்
மெத்தனப் போக்கினை களைந்து, விடு.
சிந்தனை, செயல்தனை இணைத்துவிடு - இன்று
புதியதாய் ஓர் விடியல் சமைத்துவிடு!
ஜெய் ஹிந்த்!!
சுய சிந்தனை இன்றியே ஓட்டளிப்பாய்?
பித்தளை ஈயப் பாத்திரத்தை - நீ
தங்கமாய் வெள்ளியாய் பார்த்து ஏம்மாந்திடுவாய்?
மறு கன்னம் மீண்டும் காட்டி
இரு கன்னத்தில் பதிந்தது கைச்சின்னம்.
கொள்ளேன் என்பது உயர்ந்தன்று - கற்றதை
பள்ளியில் ஏனோ மறந்து வந்தாய்?
எழு ஞாயிறு தந்த எச்சதையும்
இரு இலைகள் தந்த மிச்சத்தையும்
ஜன நாயகம் என்ற போர்வையிலே
மானம் தொலைத்துப் போர்த்திக்கொண்டாய்!
பாரதத்தை பாஞ்சாலியாய் பார்த்தான் பாரதி!
ஏ நடுத்தர வர்க்கமே! இன்று
பாரதத்தில் பாஞ்சாலி நீ - விழித்துவிடு.
உண்மை தெளிந்துவிடு, கண்ணனும் நீ!!
அறுபது ஆண்டுகள் கடந்து வந்தாய்
காந்தியின் குரங்காய் கிடந்தது வந்தாய்!
சந்திர போசினை மறந்துவிட்டாய் - பகத்
சிங்கினை கூட தொலைத்து விட்டாய்!!
குனிந்தது போதும் நிமிர்ந்துவிடு - உந்தன்
மெத்தனப் போக்கினை களைந்து, விடு.
சிந்தனை, செயல்தனை இணைத்துவிடு - இன்று
புதியதாய் ஓர் விடியல் சமைத்துவிடு!
ஜெய் ஹிந்த்!!
4 comments:
Good one - I like it
Glad you liked it +Thirumalai
என்ன எழுச்சி மிகுந்த கவிதை! அற்புதமாக எழுதியுள்ளீர்கள். நிதர்சனம் விசனத்துக்குரியதாக உள்ளது.
amas32
Good1, Gireesh.
Post a Comment