Friday, June 25, 2010

நான் வருவேன்

நான் வருவேன்
சுவற்றிலிட்ட பந்தாய்
நான் வளர்வேன்
பாறைக்குள் வேராய்!

கார்மேகம் சூழ்ந்தாலும்
காரிருள் சூழ்ந்தாலும்
பெருங்கடல் கொள்ளவந்தலும்
என்னுயிர் கொண்ட வெப்பத்தால்
என்மதியின் நுட்பத்தால்
என்னிறைவன் இணக்கத்தால்
புயல் மழையாய்
பேரொளியாய்
மிதக்கும் கத்திக்கப்பலாய்

நான் வருவேன் !
நான் வருவேன் !!
சுவற்றிலிட்ட பந்தாய்
நான் வளர்வேன்
பாறைக்குள் வேராய்!

தினம் தினம் தேய
நானொன்றும் நிலவில்லை
என் இடம் தட்டிப்பறிக்க
ஒருவன் இங்கில்லை

மேடு என்பது
பள்ளத்தின் மறுபக்கம்
தோல்வி என்பது
வெற்றியின் மறுபக்கம்
எதையும் முழுதாய் பார்த்திட
வேண்டும் மன திடம்

நான் வருவேன் !
நான் வருவேன் !!
சுவற்றிலிட்ட பந்தாய்
நான் வளர்வேன்
பாறைக்குள் வேராய்!
---------
A friend of mine, Sunil asked me if I can write a poem in Tamil that he can write music for.
I came up with the above poem...wanted to write something from the point of view of the someone who was feeling down and out, and wants to bounce back...kind of a pep talk for self....
Super Star Rajinikanth said after chandramukhi...refereing to "Baba" being flop
"நான் யானை இல்ல,
நான் குதிரை, விழுந்தா கூட சும்மா துள்ளி குதிச்சு எந்திருப்பேன்"
That should be the spirit... Read somewhere, its not a big mistake to fall, the big mistake would be to stay fallen!!
The poem is my attempt to encourage the reader to "bounce back"

3 comments:

Shallinee Raman said...

:-) Inspiriting.

the g said...

@Shalinee Raman Thank you!

Thirumalai said...

Motivating number.
Remind me a tweet : LIFE is very similar to a Boxing RING. DEFEAT is not declared When you fall DOWN. It`s declared when You REFUSE to Get Up.