Saturday, March 30, 2013

வளர்ச்சி (with translation)

நாம்
விதைத்த காதல் -
வளர்க்கிறேன் இன்றும்!
என் கண்ணீர் ஊற்றி!!


Rough Translation:

Love we planted
is still growing - for
I water it, with my tears.

Sunday, March 24, 2013

தனிமை - Loneliness

நீ விட்டுச்சென்ற
நினைவுப் பொறிகள் கொண்டு
தனிமைக் குளிர் காய்கிறேன்.



-----

Translation:

In the cold loneliness,
All I have is, sparks (Your memories),
To keep me warm.

Tuesday, March 19, 2013

படித்ததில் பிடித்தது

 நிறைந்திருக்கிறேன்
ஆழி சூழ்
உலகு போல
எங்காவது தட்டுப்பட்டால்
தவறாமல்
விசாரியுங்கள்

- அருமையான சிந்தனை. செல்லும் இடதில்லெல்லாம் என்னில் ஒரு பகுதியை விட்டுசெல்வதாய் பொருள் பதிந்த இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. 


http://naveengowri.blogspot.co.uk/2012/10/blog-post_5563.html 


Sunday, March 17, 2013

Rain drops: மோரோ மோர் - More

அப்படியே கண் முன்னே கருப்பாயி வந்து நின்றது போல் ஒரு உணர்வு. லபக் என்று கட்டித்தயிர் ஒரு வாய், மண்பானையில் பிறையூற்றிய தயிர், காளமேகப் புலவரின் பாட்டு, எங்கள் தமிழ் ஆசிரியர் சிலேடையின் உதாரணமாக எங்களுக்கு உரைத்தது, என் நண்பர்களுடன் அமர்ந்து ரசித்தது, பழைய நினைவுகளின் சாரலில் சில்லென்று நனைந்து, சிலிர்த்து நின்றேன்.


Rain drops: மோரோ மோர் - More: அம்மா 'மோர்' வரையிலும் போய் வரலாம் வருகிறாயா? கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும் என்றாள் மகள். மதியத் தூக்கக் கலக்கத்தில்,'மோரைக...